
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் குறித்த ஆவணப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிஃபோர்னியா ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்நேக்கர்(75) குறித்த ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
உடற்பயிற்சியில் ஈடுபாடு கொண்ட அர்னால்ட் உலக ஆணழகனாக மாறியதிலிருந்து ஹாலிவுட் சினிமாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அரசியலில் நுழைந்தது வரை அவரின் வாழ்க்கை ஆவணப்படமாக தயாராகியுள்ளது.
இந்நிலையில், இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த ஆவணப்படும் வருகிற ஜூன் 7 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.