இயக்குநர் அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் உலகளவில் ரூ.1200 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
இதையும் படிக்க: விதார்த் - யோகிபாபு நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
இந்நிலையில், ஜவான் நாளை (நவ.2) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.