தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்!

தீபாவளியை முன்னிட்டு எந்தெந்த சேனல்களில் எந்தெந்த புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பதைக் பார்க்கலாம்.
தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்!
Updated on
1 min read

தீபாவளி என்றால், பட்டாசு, புத்தாடை, பலகாரங்களுடன் புதுப்படங்களும் இடம்பெற்றுவிடும். ஒன்று பெரிய திரையில் புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்கள். இரண்டு, வீடுகளில் இருக்கும் சின்னத் திரைகளில் ஒளிபரப்பப்படும் புதிய படங்கள்.

அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு எந்தெந்த சேனல்களில் எந்தெந்த புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதன்படி, விஜய் ஆண்டனி இசையமைத்து நடித்த பிச்சைக்காரன் 2 மற்றும் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர்த்தொழில் திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இப்படத்தில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். 

கலைஞர் தொலைக்காட்சியில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி  திரைப்படத்தை  ஜி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யவுள்ளது.

இன்னும் எந்தெந்த புதுப்படங்கள் எந்தெந்த  சேனல்களில் ஒளிபரப்பப்படவுள்ளன என்பது குறித்து வரும் நாள்களில் தெரிய வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com