சிங்கப் பெண்ணே தொடரில் நடிக்கும் ஏஜென்ட் டீனாவின் தோழி!

கலா, பிருந்தா, ரகுராம் ஆகிய நடன இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். 
சிங்கப் பெண்ணே தொடரில் நடிக்கும் ஏஜென்ட் டீனாவின் தோழி!
Published on
Updated on
2 min read

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப் பெண்ணே தொடரில் பிரபல நடன இயக்குநர் நடிக்கவுள்ளார். இதனை, அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப் பெண்ணே தொடர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகிவருகிறது. ஆட்சியராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் கிராமத்தில் பிறந்த விவசாயியின் மகள் குறித்த கதையே சிங்கப்பெண்ணே. 

இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணே கலைமானே தொடரை இயக்கிய தனுஷ், சிங்கப் பெண்ணே தொடரை இயக்குகிறார். 

இந்தத் தொடரில் நடன இயக்குநர் ரேகா ஏஞ்சலினா நடிக்கவுள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே குடும்பத்தின் ஒரு அங்கமாக நாளை முதல் இரவு 8 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வரப்போகிறேன். கண்டுகளியுங்கள்.

என்னை ஆதரித்த என் ஆண்டவருக்கு முதல் நன்றி. அங்கீகாரம் கொடுத்து, வாய்ப்பளித்த பாலா சார் மற்றும் மாலா ஆகிய இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மிராக்கிள் மீடியாவிற்கும் மிக்க நன்றி. சன் தொலைக்காட்சிக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார். 

நடன இயக்குநர் ரேகா ஏஞ்சலினா, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப் பாடல்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். கலா, பிருந்தா, ரகுராம் ஆகிய நடன இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். 

விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக நடித்த நடன இயக்குநர் வசந்தியின் தோழியான இவர், தாலாட்டு தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து சில்லுனு ஒரு காதல், திருமணம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com