சதீஷ் நடிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலரை நாளை(நவ.4) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்.
காமெடி நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து வித்தைக்காரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரவீன் சரவணன் இயக்கும் முஸ்தபா முஸ்தபா படத்திலும் நடிகர் சதிஷ் நடித்து வருகிறார்.
தற்போது, நடிகர் சதீஷ் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ் சேவியர் இயக்குகிறார். சென்னையில் பெரும் பொருள்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய வேடங்களில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நடிக்கின்றனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: தேர்தலில் நிற்கும் கங்கனா ரணாவத்?
இந்த நிலையில், கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலரை நாளை(நவ.4) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் நாளை(நவ.4) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஞ்சுக் கைவண்ணம்
முதல் தேர்தலும் சுகுமார் சென்னும்...
ஏழு தலைமுறை சுற்றம்...

முத்தான முத்தல்லவோ...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


