பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகாவின் நடிப்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாளவிகா மோகனன் அறிமுகமானார்.
பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில்...
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றி பெற்றது. பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: வெளியானது ஹாய் நான்னா படத்தின் 3வது பாடல்!

மாஸ்டர் படத்தில்...
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டி படத்தில்...
ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டாலும் கமர்ஷியல் சினிமாக்களில் நடித்தாலும் உடனே அழுத்தமான கதாபாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, மாளவிகா எப்போதும் தயாராக இருக்கிறார்.

நடிகர் விக்ரமுடன் அவர் நடித்துள்ள "தங்கலான்" திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான "பியாண்ட் தி க்ளவுட்ஸ்" படத்திலேயே மிக கனமான கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தங்கலான் படத்தில்...
‘தங்கலான்’ படத்தில் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது அவரது பன்முக திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். இந்தப் படத்துக்காக மாளவிகா சிலம்பம் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

பேட்ட படத்தில்...
"இதுவரை பார்க்காத மாளவிகாவை படத்தில் பார்க்கலாம்" என இயக்குநர் பா. ரஞ்சித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
நாங்கள் தோற்கவில்லை; பதவி விலக மாட்டேன்! மமதா

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM

அஸ்ஸாம் பேரவைக்கு 7 பெண்கள் தேர்வு! ஒரே கூட்டணியில் 6 பேர்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


