குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

சில கதைகள் நீண்ட காலம் நம் மனத்திலேயே தங்கிவிடும்... கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது...

Keerthy Suresh in a akka web series

அக்கா இணையத் தொடரில் கீர்த்தி சுரேஷ் - படங்கள்: இன்ஸ்டா / கீர்த்தி சுரேஷ்

Updated On :

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில், “சில கதைகள் நீண்ட காலம் நம் மனத்திலேயே தங்கிவிடும்” என்று 'அக்கா’ இணையத் தொடர் பற்றி மிகவும் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தத் தொடரில் கீர்த்தி சுரேஷ் பவானியாகவும், ராதிகா ஆப்தே ருத்ராவாகவும் நடித்துள்ளார்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு ‘அக்கா’ என்ற இணையத் தொடரின் டீசர் வெளியாகியது. இந்தத் தொடர் நெட்பிளிக்ஸில் அக்.30ஆம் தேதி வெளியாகியது.

பெண்களை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையான இத்தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி. 1980-களின் பின்னணியில் தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் கட்டமைக்கப்பட்டு, ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பெர்னூரு என்ற கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தத் தொடரில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது:

சில கதைகளைச் சொல்லி முடித்த பிறகும், அவை நீண்ட காலத்திற்கு நம் மனத்திலேயே தங்கிவிடும். 'அக்கா' எப்போதும் எனக்கு அப்படியான ஒரு கதையாகவே இருக்கும்.

ஆதித்யா சோப்ராவுக்கு இதயம் கனிந்த நன்றி. இந்தத் தொடரை நம்பியதற்கு தயாரிப்பாளர்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் நன்றி.

பவானி என்ற கதாபாத்திற்கு என்னை நம்பியதுக்கு தர்மராஜ் ஷெட்டிக்கு நன்றி. இயக்குநர், ஒளிப்பதிவு குழுவினருக்கு என் எல்லையில்லா அன்பு. ராதிகா ஆப்தேவுடன் இணைந்து பவானி - ருத்ராவுக்கு உயிர் கொடுத்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

அக்கா கதாபாத்திரம் சிறப்பாக வர உதவிய அனைவருக்கும் நன்றி. இவர்கள் இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது. விகாஸ், சின்ஹாரோன் எனக்கு பவானியின் குரலைக் கண்டுபிடிக்க உதவினார்கள்.

மற்றும் பலர் திஅரைக்கு பின்னாடி அயராது உழைத்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் என் எல்லையில்லா அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அக்கா தொடரைப் பார்த்த அனைவருக்கும் எனது நன்றிகள். பவானி மற்றும் அவளது உலகத்தைப் பாராட்டியவர்களுக்கு மிக்க நன்றி எனக் கூறியுள்ளார்.

Summary

Some stories stay in the mind for a long time.... Keerthy Suresh opens up about akka series love and reception!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.