காட்டில் விடுமுறையைக் கழிக்கும் சீரியல் நடிகை! விருப்பமா? விளம்பரமா?

விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கோ அல்லது சுற்றுலா தலங்களுக்கோ செல்லும் நடிகைகளுக்கு மத்தியில் சரண்யா காட்டிற்குச் சென்றுள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 
சரண்யா துராடி
சரண்யா துராடி
Published on
Updated on
1 min read

சின்னத்திரை நடிகை சரண்யா துராடி காட்டில் தனது விடுமுறை நாள்களைக் கழிக்கும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைதேகி காத்திருந்தால் தொடரில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை சரண்யா துராடி. இந்தத் தொடர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை ஒளிரப்பானது.

சரண்யா துராடி நடிப்பதற்கு முன்பு ஊடகத் துறையில் செய்திவாசிப்பாளராகப் பணிபுரிந்தார். இதனால், பயணங்கள் செய்வதில் அதிகம் நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார். 

பயணம் மேற்கொள்ளும்போது புகைப்படங்கள், விடியோக்களை ரசிகர்களுடம் பகிர்ந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டவர். சமூக வலைதளத்தில் அவரைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்பதால், அவர் பதிவிடும் படங்களுக்கு வரவேற்பும் அதிகமாக காணப்படுகிறது. 

இந்நிலையில், விடுமுறை நாள்களைக் கழிப்பதற்காக தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் சென்றுள்ளார். அங்கு தங்கி அப்பகுதியில் வாழும் மக்களை சந்திக்கும் அவர், அவர்களையும் புகைப்படம் எடுத்துள்ளார். 

விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கோ அல்லது சுற்றுலா தலங்களுக்கோ செல்லும் நடிகைகளுக்கு மத்தியில் சரண்யா காட்டிற்குச் சென்றுள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். ஒருசிலர் விளம்பரத்துக்காக செய்தாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com