நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்லும் அந்த 3 போட்டியாளர்கள் யார்?

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குச் செல்லும் மூன்று போட்டியாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2023, 9:31 am

DIN

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குச் செல்லும் மூன்று போட்டியாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

இதுவரை அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா தேவி, யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப் ஆண்டனி, ஐஷு மற்றும் கானா பாலா ஆகியோர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள்  வைல்டு கார்டு போட்டியாளர்களாக களமிறங்கவுள்ளனர்.

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 14 போட்டியாளர்களுக்கும், 3 வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு நடைபெறவுள்ள போட்டியில் தோல்விபெறும் 3 பேர் பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்களாக வினுஷா, விஜய் வர்மா, அனன்யா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.