அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த இயக்குநரின் அனிமல் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இதில் ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தில் நேற்று நடந்த அனிமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, “ஒவ்வொரு வருடமும் பல இயக்குநர்கள் புதியதாக வருகிறார்கள்; வெற்றி பெருகிறார்கள்; செல்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களை, சினிமாத்துறையை அதிர வைக்கிறார்கள். மேலும், சினிமாவில் இருக்கும் நடைமுறைகள், பார்முலாக்களை உடைத்து தனக்கு பிடித்தபடி சினிமாவை இயக்கிறார்கள். ராம் கோபால் வர்மாவுக்கு அடுத்து இதனை சிறப்பாக செய்பவர் சந்தீப் மட்டுமே. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்” எனக் கூறினார்.