எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திரையரங்கில் குழந்தையைப் போல அழுதேன்: ஐஸ்வர்யா லட்சுமியின் நெகிழ்ச்சிப் பதிவு!

பிரபல நடிகை ஐஸ்வர்யா  லட்சுமி , மம்மூட்டியின் ‘காதல் தி கோர்’ படம் பார்த்து குழந்தையை போல அழுதேன் எனக் கூறியுள்ளார். 

News image
Updated On :27 நவம்பர் 2023, 11:55 am

DIN

ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மம்மூட்டியின்  ‘காதல் தி கோர்’ படம் பார்த்து குழந்தையை போல அழுதேன் எனக் கூறியுள்ளார். 

Story image

நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை ஜியோ பேபி இயக்க மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவானது. இப்படம் கடந்த நவ.23 ஆம் தேதி வெளியானது.

அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் (மம்மூட்டி) தன் மனைவி ஓமணா (ஜோதிகா) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஒருநாள், தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்புகையில் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார்.

Story image

ஆனால், அடுத்த சில நாள்களில் அவருக்கு எதிராக அவர் மனைவி விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். விவாகரத்துக்குக் காரணமாக அவர் கூறும் காரணம் பூதாகரமாகிறது. அதுதான் படத்தின் மையக் கதை. அதிலிருந்து மம்மூட்டி எப்படி மீள்கிறார் என்பதே கதை. 

Story image

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  நடிகை  ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தனது எக்ஸ் பக்கத்தில், “மம்மூட்டி அவர்களே நீங்கள் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தனிமை, பயம், வலி, நீங்கள் எடுக்கும் முடிவின் கனம் என அனைத்தையும் நானும் உணர்ந்தேன். படத்தில் உங்களது ஒவ்வொரு பார்வையும் எனது இதயத்தை பற்றி இழுத்தது. படத்தின் சிறந்தப் பகுதியே இரண்டாம் பகுதியில் வரும் ‘என்ட தெய்வமே’தான். திரையரங்கில் ஒரு குழந்தையைப் போல அழுதேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.