ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

லோகேஷ் கனகராஜ் - விஜய் குமார் கூட்டணியில் தயாராகும் ‘ஃபைட் கிளப்’!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :29 நவம்பர் 2023, 12:39 pm

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கிய  லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது, லோகேஷ் நடிகர் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 171’ படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் ஜி-ஸ்குவாட் (G-squad) என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார். 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், உறியடி விஜய் குமார் படத்தினை தனது முதல் படமாக அறிவித்துள்ளார். இப்படத்திற்கு ‘ஃபைட் கிளப்’ எனப் பெயரிட்டுள்ளனர். அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார், லோகேஷ் கனகராஜ்ஜின் நீண்ட நாள் நண்பர். உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.