47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்த வாரம் ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

News image
கோப்புப்படம்
Updated On :30 நவம்பர் 2023, 10:13 am

DIN

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவானது. 800 படத்தின் நாயகனாக ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த மதூர் மிட்டல் நடித்துள்ளார். 

இப்படம் ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகசைதன்யா நடித்துள்ள தூதா என்ற வெப் தொடர் டிச. 1 ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. நாகசைதன்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி நடித்துள்ளார். இந்த வெப் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் மிஷன் ராணிகஞ்ச் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸிலும், இந்தியானா ஜோன்ஸ் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் வெளியாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.