மெரி கிறிஸ்துமஸ் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றியுள்ளது படக்குழு.
மெரி கிறிஸ்துமஸ் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. 'அந்தாதுன்' படம் பெரும் வெற்றி பெற்றதால் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்தது. ஆனால் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது.

தொடர்ந்து, ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வருகின்ற டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், முன்கூட்டியே டிச.8 ஆம் தேதி வெளியிடுவதாக மீண்டும் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு மாற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com