நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரஜினி - 170 படத்தில் ராணா டகுபதி!

ரஜினியின் 170வது படத்தில் நடிகர் ராணா டகுபதி இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2023, 6:18 am

DIN


ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். இந்த படத்திற்கும் அனிருத்துதான் இசை. படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. படப்பிடிப்பு வரும் 4ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்காக செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்க உள்ளனர். அது முடிந்ததும் படத்தின் மற்ற படப்பிடிப்பை கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியான நிலையில் படத்தில் நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது

இந்த நிலையில், இப்படத்தில் பாகுபலி புகழ் நடிகர் ராணா டகுபதி நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.