சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

லியோ பட சென்சார் குறித்த அறிவிப்பு!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2023, 2:17 pm

DIN

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் லியோ. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பிரமாண்ட பொருட் செலவில் தயாரித்துள்ளது. படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. ஏற்கெனவே படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கான  சென்சார் இன்று (அக்.3) நடைபெற்ற நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் குழுவினர் வழங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.