தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விடாமுயற்சியில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ்! 

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார் பிக்பாஸ் பிரபலம் ஆரவ். 

News image
Updated On :9 அக்டோபர் 2023, 10:39 am

DIN

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படமான விடாமுயற்சியை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. பின்னர் சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.  

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4இல் அஜர் பைஜானில் தொடங்கியதாகவும் தொடர்ந்து 3 மாதம் அங்கு படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியது. 

Story image

இந்நிலையில் இயக்குநர் மகிழ் திருமேனி பிறந்தநாளினை முன்னிட்டு நடிகர் ஆரவ் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதில் தன்னை நம்பியதற்கு நன்றி எனக் கூறியுள்ளார். எற்கனவே, உதயநிதியை வைத்து மகிழ்திருமேனி இயக்கிய ‘கலகத் தலைவன்’  படத்தில் வில்லனாக ஆரவ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Story image

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஆரவ் தற்போது ரம்யா பாண்டியனுடன் ஒரு படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.