இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சிறைக்குச் செல்லும் பிக் பாஸ் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

News image
Updated On :10 அக்டோபர் 2023, 1:08 pm IST

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த சீசன்களை போல் அல்லாமல் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள், இரண்டு நாமினேஷன்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டைக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முதல் வார முடிவில் மக்கள் குறைவாக வாக்களித்த அனன்யா வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, உடல்நிலை மற்றும் மனநிலை கருத்தில் கொண்டு பவா செல்லத்துரை நேற்று பிக் பாஸ் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேறினார்.

இந்த நிலையில், கடந்த வாரம் குறைவான ஈடுபாட்டுடன் செயல்பட்டதாக வினுஷா மற்றும் அக்சயாவை தேர்வு செய்த பிக் பாஸ், அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

முந்தைய சீசன்களில் குறைவான ஈடுபாட்டுடன் செயல்படும் இரண்டு பேரை சக போட்டியாளர்கள்தான் தேர்வு செய்வார்கள். ஆனால், இந்த முறை பிக் பாஸே தேர்வு செய்துள்ளார்.

அதேபோல், இரண்டு போட்டியாளர்களுக்கும் கைதுக்கான பிடியாணை பிறப்பிக்கப்படுவதாகவும், இந்த வாரம் வியாழக்கிழமை இருவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக இருவருக்கும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதில் சிறப்பாக வாதிடும் பட்சத்தில் சிறைக்கு செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிக் பாஸ் வீட்டுக்கும், ஸ்மால் பாஸ் வீட்டுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நிகழ்ந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.