தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஃபகத் ஃபாசிலுக்காக கதை எழுதியுள்ள லோகேஷ் கனகராஜ்! 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ஃபகத் ஃபாசிலுக்காக ஏற்கனவே ஒரு கதையை எழுதியுள்ளதாக கூறியுள்ளார். 

News image
Updated On :10 அக்டோபர் 2023, 11:54 am

DIN

நடிகர் ஃபகத் ஃபாசில் மலையாளத்திலும் தமிழிலும் சேர்த்து 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது அசாத்தியமான நடிப்பினால் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, கேரள மாநில விருதுகள் என பல்வேறு படங்களுக்கு பல விருதுகளை குவித்துள்ளார். 

தமிழில் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் படங்களிலும் தெலுங்கில் புஷ்பா படத்திலும் நடித்து தற்போது தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். 

லியோ குறித்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ், “நான் முன்னமே மஃப்டி என்ற ஒரு கதையை ஃபகத் ஃபாசிலுக்காக எழுதியிருக்கிறேன். தற்போது இந்தப் படத்தினை இயக்க முடியுமா எனத் தெரியவில்லை. எனெனில் 10 படங்களுக்கு மேல் இயக்கமாட்ட்டேன் என்பதில் உறிதியாக இருக்கிறேன். எல்சியூ படங்களை முடிக்க வேண்டும். அடுத்து ரஜினி சார் படம், கைதி 2 இருக்கிறது. இரும்புக் கை மாயாவி படமும் இருக்கிறது. இதற்கே 10 படங்கள் சரியாக இருக்குமென நினைக்கிறேன்” எனக் கூறியிருந்தார். 

Story image

சமீபத்தில் வந்த மாமன்னன் படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக வந்தாலும் தமிழக மக்கள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. லிடோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.