
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு தற்போது கதாசிரியராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன் படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அப்படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
அப்படத்திற்கான போஸ்டரை தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ள யோகிபாபு, “முதன்முதலாக நீங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள படம் வெற்றிபெற வாழ்த்துகள். இந்தப் படம் மறக்கமுடியாத ஒன்றாக இருக்க உங்களுடன் இணைந்து நானும் பிரார்த்திக்கிறேன். அடுத்ததாக நீங்களும், நானும் இணைந்து நடிக்கும் படத்திற்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்திற்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தமிழகத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு!
ரஜினிகாந்த், விஜய், அஜித், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்துள்ள யோகிபாபு மண்டேலா, கூர்கா பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.