6 படங்கள் கைவசம்: பிரபலங்கள் வாழ்த்து மழையில் அனிருத்!

இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளுக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
6 படங்கள் கைவசம்: பிரபலங்கள் வாழ்த்து மழையில் அனிருத்!

நடிகர் ரஜினியின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா.ஆர் இயக்கத்தில் 2012இல் வெளியான ‘3’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்தர்.  பின்னர் எதிர் நச்சல், டேவிட் ஆகிய படங்கள் ஹிட் அடிக்க வேலையில்லா பட்டதாரி படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நாயகர்களுக்கு  அனிருத் இசையமைத்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் கலக்கி வருகிறார் அனிருத். இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் பாடகராகவும் அசத்தி வருகிறார். பல்வேறு இசையமைப்பாளர் படங்களிலும் பாடல் பாடியுள்ளார். 

சமீபத்தில் வந்த ஜெயிலர், ஜவான் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்து விஜய்யின் லியோ அக்.19இல் வெளியாக உள்ளது.

கைவசம் உள்ள படங்கள்: லியோ படத்துக்கு அடுத்து இந்தியன் 2, விடா முயற்சி, விஜய் தேவரகொண்டா 12, ரஜினி 171, கவின் 4, தேவரா 1 ஆகிய படங்களுக்கும் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இயக்குநர் ஷங்கர்: ராக்ஸ்டார் அனிருத்துக்கு  பிறந்தநாள் வாழ்த்துகள் 


யுவன் ஷங்கர் ராஜா: பிறந்த்நாள் வாழ்த்துகள் சகோதரர். எல்லாம் சிறப்பாக  அமையட்டும்.


ரத்னகுமார்: தாராளமான மனம் கொண்ட அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். லியோவுக்கு வாழ்த்துகள்.


சிவகார்த்த்கேயன் புரடக்ஸன்ஸ்: இசையால் நமது மனங்களை எரியூட்டும் இசையின் ஞானி ராக்ஸ்டார் அனிருத்துக்கு வாழ்த்துகள்.

விக்னேஷ் சிவன்:  எங்கள் அரசன் அனிருத்துக்கு வாழ்த்துகள். 


சித்தாரா என்டர்டெயின்மென்ட்: ராக்ஸ்டார் அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா 12 படக்குழு சார்பாக வாழ்த்துகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com