தென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

புதுத் தாலியுடன் சின்னத்திரை நடிகை! குழப்பத்தில் ரசிகர்கள்!!

மகாநதி தொடரில் நடித்துவரும் நடிகை தாலியுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்படடு வருகிறது. 

நிவினுடன் காவேரி

Published On :

மகாநதி தொடரில் நடித்துவரும் நடிகை தாலியுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்படடு வருகிறது. 

மகாநதி தொடரில் காவேரி பாத்திரத்தின் திருமணம் விஜய்யுடன் நடைபெறுமா? நிவினுடன் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனிடையே  நிவினுடன் தாலிகட்டிக்கொண்டதைப்போல காவேரி வெளியிட்டுள்ள படங்கள் சின்னத்திரை ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், யாருடன் திருமணம் நடைபெறும் என்ற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தந்தையை இழந்த நான்கு சகோதரிகளின் கதையாக மகாநதி எடுக்கப்பட்டுவருகிறது. 

இந்தத் தொடரில் காவேரி என்ற முதன்மை பாத்திரத்தில் நடித்துவருபவர் லஷ்மி பிரியா. இவருக்கு நிவின் உடன் திருமணம் நடைபெறுமா? விஜய்யுடன் திருமணம் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 

தங்கையின் அறுவை சிகிச்சைக்காக பணம் கொடுத்ததால்,  காவேரி ஓராண்டு மனைவியாக இருக்க வேண்டும் என விஜய் ஒப்பந்தம் செய்துகொண்டார். அவருடன் திருமணம் நடைபெறுவதைப்போன்று விஜய் தொலைக்காட்சியில் முன்னோட்ட விடியோக்கள் வெளியாகின.

விஜய்யுடன் காவேரி

விஜய்யுடன் காவேரி

நிவின் - காவேரி ஜோடிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இதனால், யாருடன் காவேரி பாத்திரத்துக்கு திருமணம் நடக்கும் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. 

Story image

இந்நிலையில், காவேரி பாத்திரத்தில் நடித்துவரும் லஷ்மி, சமூக வலைதளத்தில் நிவினுடம் திருமணம் செய்துகொண்டதைப்போன்று தாலியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். 

இதனால், நிவின் - காவேரி ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளதா என ரசிகர்கள் அப்படத்துக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொடரின் டிஆர்பியை அதிகரிக்க இப்புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதாகவும், ஆனால் விஜய்யுடன் திருமணம் நடந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கும் திருப்பத்துக்காக இவ்வாறு செய்வதாகவும், ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.