தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் வேளைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தளபதி68 எனக் குறிப்பிடப்படும் இந்தப் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.
இப்படத்தில் ஏற்கனவே பிரசாந்த், பிரபு தேவா, மோகன் ஆகிய மூன்று பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில், தற்போது 90களில் கதாநாயகனாக நடித்த மற்றொரு பிரபல நடிகரும் இதில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர் கேரளாவைச் சேர்ந்த ஜெயராம் ஆவார். இவர் ஏற்கனவே வெங்கட் பிரபு மற்றும் விஜய் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தில் விஜய் மற்றும் ஜெயராம் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இரண்டாவது படமான சரோஜா திரைப்படத்தில் ஜெயராம் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த அவர் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”இந்த தொண்டையோடு எப்புடிடா?” சீமானை பாடச் சொன்ன தொண்டர்கள்! | NTK

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!

எடப்பாடியின் அரசியல் அனுபவம்: உதயநிதி விமர்சனம்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


