நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெளியானது லியோ படத்தின் வில்லன் யாரு பாடல் 

லியோ படத்தின் 'வில்லன் யாரு' லிரிக்கல் விடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :20 அக்டோபர் 2023, 4:14 pm

DIN

லியோ படத்தின் 'வில்லன் யாரு' லிரிக்கல் விடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. இதில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கெளதம் வாசுதேவ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்ததால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. 

இருப்பினும், படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. இதனிடையே உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ முதல்நாள் வசூலாக ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

இதுவே, இந்த ஆண்டில் வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக முதல்நாள் வசூலைப் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் லியோ படத்தின் 'வில்லன் யாரு' லிரிக்கல் விடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இனி வரும் நாட்களில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகும் எனவும் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.