
இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வெளியான லியோ படத்தின் ‘ஆர்டனரி பர்சன்’ என்கிற பாடல், ஐரோப்பிய இசையமைப்பாளர் பாடலிலிருந்து நகல் எடுக்கப்பட்டது என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லியோ. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், படத்தின் ஒரு பாடல் ஐரோப்பிய இசையமைப்பாளர் ஒட்னிகா என்பவரின் ஆல்பத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.
ஐரோப்பாவின் பெலரஸ் நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஒட்னிகா. இவர் இசையமைத்து வெளியிட்ட ஆல்பம் `வேர் ஆர் யூ’
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகிய ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ என்கிற இணையத்தொடரில் ‘ஐ ஆம் நாட் அவுட்சைடர்’ பாடலாகப் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், லியோ படம் வெளியான பிறகு, ஒட்னிகாவின் யூடுயூப் பக்கத்தில் அனிருத் பாடலை ரசிகர்கள் சுட்டி காட்டினர்.
இதையும் படிக்க: கமலுக்கு ஜோடியாக நயன்தாரா?
அதனை கவனித்த ஒட்னிகா, ``படத்தில் யாரும் அனுமதியின்றி இந்த இசையைப் பயன்படுத்தியுள்ளார்களா? தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது” எனப் பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பதிவர், “இது முறையாக உரிமை வாங்கப்பட்டு மாறுதல் செய்யப்பட்டது தான். வெளிநாடுகளில் இது வழக்கம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: 10 படங்கள்.. ரூ.2,200 கோடி வசூல்.. அசத்திய தமிழ் சினிமா!
அதற்கு பதில் அளித்துள்ள ஒட்னிகா, “கலைஞரின் அனுமதியில்லாமல் இந்த இசையின் உரிமையை நகல் எடுக்கவோ உரிமம் பெறவோ இயலாது. என்னையோ குழுவினரையோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை” எனப் பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.