விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலுக்கான மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கமலின் 234வது படம் குறித்து, “நாயகனை மிஞ்சும் ஒரு படத்தில்தான் நாங்கள் இணைய இவ்வளவு ஆண்டுகள் காத்திருந்தோம்” எனக் கமல்ஹாசன் கூறியிருந்தார். இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: ஜப்பான் திரைப்பட பாடல் வெளியீடு
இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை நயன் தாராவிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் இப்படத்தின் முதல் பார்வைக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கமலின் பிறந்தநாளான நவ.7இல் அறிமுக விடியோவினை வெளியிட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்

வாக்காளா்களுக்கு வழங்க பணம் பதுக்கல்? சென்னையில் வருமான வரித் துறையினா் சோதனை

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

