இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு ஜப்பான் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெறும் டச்சிங் டச்சிங் எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை இயக்குநர் அருண்ராஜ் காமராஜ் எழுதியுள்ளார். நடிகர் கார்த்தி மற்றும் பாடகர் இந்திரவதியும் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஈஸ்டா் வாரஇறுதி தாக்குதல்கள்: 26 போ் உயிரிழப்பு

தீவிரவாதிகளுக்கு ட்ரோன் பயிற்சி அளித்ததாக கைதான 7 வெளிநாட்டினருக்கு 30 நாள் நீதிமன்ற காவல்

வங்கதேச பிரதமருடன் இந்திய தூதா் சந்திப்பு: இருதரப்பு உறவை மீன்டும் கட்டமைக்க உறுதி
பி.எம்.எல்.ஏ. வழக்கில் சித்திக்கியின் இடைக்கால பிணை கோரும் மனு மீது விசாரணை ஏப்.11-க்கு ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


