துர்க்கை வழிபாட்டுக்குரிய இந்த ஒன்பது நாள்களில் இறுதி நாள் சிறப்பு வாய்ந்தது. இதனையொட்டி நடைபெறுகிற வழிபாட்டில் பாலிவுட் நடிகைகள் கலந்து கொள்கிற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தொலைகாட்சி தொகுப்பாளாராக இருந்து நடிகையாக வலம்வரும் ரியா சக்ரபோர்த்தி, 100 வருட பழமையான சேலையை உடுத்தி நவராத்திரி வழிபாட்டிற்காக தயாராவதை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: ரஜினி வீட்டில் துர்கா ஸ்டாலின், தமிழிசை, ஓபிஎஸ்!
கஜோல் தனது குடும்பத்தினருடன் ராணி முகர்ஜியின் துர்க்கை வழிபாட்டில் பங்கெடுத்துள்ளார். மகன்கள் உடன் இந்த வழிபாட்டில் அவர் நிற்கும் புகைப்படங்களை தனது பக்கத்தில் பகிர்ந்து இந்த நாள் பற்றிய குறிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதே நிகழ்வில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் கலந்து கொண்டுள்ளார். ‘மகிழ்ச்சியான தசரா’ என்கிற வரியோடு அவர் பகிர்ந்திருக்கிற படம் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: லியோ ரூ.500 கோடி வசூல்?
பூஜா ஹெக்டே நவராத்திரியின் எட்டாம் நாளில் கொண்டாடப்படும் அஷ்டமி பூஜையில் வழிபடுகிற படத்தை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.