கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தாமதமாக வெளியான விக்ரம் 62 பட அறிவிப்பு விடியோ! 

மாலை 6 மணிக்கு வெளியாவதாக இருந்த விக்ரம் 62வது படத்தின் அப்டேட் தாமதமாக வெளியானது. 

News image
Updated On :28 அக்டோபர் 2023, 2:03 pm

DIN

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். நல்ல வரவேற்பினைப் பெற்ற பொன்னியின் செல்வனுக்கு பிறகு பா.இரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் விக்ரம். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Story image

விக்ரமின் 62வது படத்தை ஜூட் ஆண்டனி இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா, நிவின் பாலி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும்  ஒரு பக்கம் கூற மற்றொரு பக்கம் சித்தா இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்க உள்ளதாகவும் பலவிதமாக தகவல்கள் வெளியாகியன. 

6 மணிக்கு வெளியாக இருந்த அப்டேட் தொழில்நுட்பம் காரணமாக ஒருமணி நேரம் தாமதமாக வெளியானது. இதில் சித்தா இயக்குநர் எஸ்யூ அருண்குமார் இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது. 

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘சித்தா’ சமீபத்தில் வெளியானது. 

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘இப்படம்  திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. 

Story image

ஜி.வி.பிரகாஷ் இசையில் சு.அருண்குமார் இயக்க ரியா ஷிபு தயாரிக்கிறார். 3.43 நிமிடம் உள்ள இந்த சியான் 62 அறிவிப்பு விடியோ கவனம் ஈர்க்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.