நடிகை அதிதி பிறந்தநாளுக்கு சித்தார்த்தின் கவிதை! 

நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கு கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த். 
நடிகை அதிதி பிறந்தநாளுக்கு சித்தார்த்தின் கவிதை! 

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தார். தெலுங்கில் 2021இல் மஹாசமுத்திரம் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பினை பெற்றது. 

அதிதி ராவ் ஹைதரி தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களும் பலர் நடிகர் நடிகைகளும் வாழ்த்து தெரிவித்தனர். 

சித்தார்த்துக்கு பல நடிகைகளுடன் காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் தற்போது அதிதி ராவுடன் காதல் இருப்பதாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. கடந்தாண்டுப் பதிவில் சித்தார்த், “இதய ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களது சிறிய, பெரிய அனைத்து விதமான கனவுகளுக்குமாக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என எழுதி இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு இருந்தார். 

இந்நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து கவிதை ஒன்றினையும் எழுதி வாழ்த்தியுள்ளார். அதில் இறுதியில் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. விரைவில் சந்திக்க வேண்டுமென கூறியிருந்தார் . நடிகை அதிதியும், “ஆமாம் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. நீ கவிஞன் என்பது எனக்கு தெரியாது. அதி புத்திசாலியான உன்னைப் பற்றி நான் தெரிந்திருக்க வேண்டும்” எனக் கமெண்ட் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com