உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 26-ஆவது ஆட்டம் நேற்று சென்னை மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
271 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய தெ.ஆ. அணியினர் 4 விக்கெட்டுகள் வரிசையாக சரிந்ததால் கடைசி நேரத்தில் தடுமாற்றம் கண்டது. முடிவில் கேசவ் மஹராஜ் 7, டப்ரைஸ் ஷம்சி 4 ரன்களுடன் அணியை ‘த்ரில்’ வெற்றிக்கு வழி நடத்தினா்.
இதையும் படிக்க: வார்னர், ஹெட் அசத்தல்: நியூசிலாந்துக்கு 389 ரன்கள் இலக்கு!

போட்டி சம பலத்துடன் இருக்கும்போது சென்னை ரசிகர்கள் இரண்டு அணியினருக்கும் ஆதரவு தெரிவித்தனர். அதேவேளையில் அகமதாபாத்தில் நடந்த ஒரு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையானது.
Have a good time in India.
â Muhammad Wasim Junior (@MWasimJunior) October 27, 2023
Thank you Indian Fans #BabarAzam #PakistanCricket #Rizwan #HarisRauf #umpire #PAKvSA #PakVsRSA #SAvsPAK pic.twitter.com/PPSwi53u59
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என யார் விளையாடினாலும் அனைவருக்கும் ஆதரவு அளிப்பவர்கள் சென்னை ரசிகர்கள். அதனால்தான் தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அறிவார்ந்த சென்னை ரசிகர்கள் என பலரும் கூறுவார்கள்.
இதையும் படிக்க: ஆசிய பாரா ஒலிம்பிக்கில் 100 பதக்கங்கள்: பிரதமர் மோடி பாராட்டு
சமீபத்திய போட்டிகளிலும் பாக். ரசிகர்கள் மற்றும் ஆப்கன் வீரர்கள் இதை நெகிழ்ச்சியாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.
Thank you India for Your Support Love you Chennai!! #PAKvsSA #SAvsPAK pic.twitter.com/ucpqHF1kWD
â Keshav Maharaj (@imKeshavMaharaj) October 27, 2023
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணி வீரர் நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் ஷம்சி தனது எக்ஸ் வலைதளப்பதிவில், “முதன்முறை சென்னையில் விளையாடுகிறேன். இந்த சிறப்பான போட்டியில் நான் பங்கெடுத்தது மகிழ்ச்சி. சென்னை ரசிகர்கள் அற்புதமானவர்கள். இரு அணிகளுக்கும் ஆதரவளித்தார்கள். மேலும் இரு அணியிலும் யார் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஆதரவளித்தார்கள். நன்றி” எனக் கூறியுள்ளார்.
Also, can we take a minute to appreciate Chennai crowd, they were superb, hugging SA supporter, cheering for Shaheen
â Alisha Imran (@Alishaimran111) October 27, 2023
People from Chennai always have a warm vibe to them #SAvsPAK pic.twitter.com/3YaRhwu07p
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘டெல்டா’ மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - உதயநிதி ஸ்டாலின்

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க பாடந்தொரை பகுதியில் 2 கும்கிகள் வரவழைப்பு

விவசாயக் கண்மாய்களை ஆழப்படுத்த வேண்டும்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மாணவா்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு! நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும்: காா்கே வலியுறுத்தல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



