கமல் 234 படத்தில் இணைந்த அன்பறிவ் சகோதரர்கள்! 

பிரபல சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் கமலின் 234வது படத்தில் இணைந்துள்ளார்கள்.  
கமல் 234 படத்தில் இணைந்த அன்பறிவ் சகோதரர்கள்! 

மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்கள். பின்னர் கேஜிஎஃப் படத்துக்காக தேசிய விருது பெற்று இந்தியா முழுவதும் பிரபலமானார்கள்.

கேஜிஎஃப் இயக்குநர் பிர்சாந்த் நீல் உடன் அன்பறிவ்
கேஜிஎஃப் இயக்குநர் பிர்சாந்த் நீல் உடன் அன்பறிவ்

பின்னர் லோகேஷ் கனகராஜ் படங்களான மாநகரம், கைதி. மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் மூலம் மிகவும் புகழ்பெற்றுள்ளார்கள். தற்போது அன்பறிவ் சகோதரர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்திப்  படங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். 

சார்பட்டா பரம்பரை படப்பிடிப்பில்...
சார்பட்டா பரம்பரை படப்பிடிப்பில்...

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலுக்கான மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது.  கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. 

கமலின் 234வது படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் முதல் பார்வைக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாகவும் கமலின் பிறந்தநாளான நவ.7இல் அறிமுக விடியோவினை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில் அன்பறிவ் சகோதரர்கள் கமல் 234இல் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இவர்களுக்கு, “எனது ஆண்டவர் படத்தில் இணைந்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com