47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சலார் வெளியீட்டுத் தேதி மாற்றம்?

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2023, 9:33 am

DIN

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரம்மாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர்  பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சலார் திரைப்படம்  வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இப்படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் இதன் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.