மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மார்க் ஆண்டனி டிரைலர் குறித்த புதிய அப்டேட்

மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.  

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 11:27 am

மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு(செப்.15) மார்க் ஆண்டனி வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் நாளை (செப்டம்பர் 3) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.