தெலுங்கின் முன்னணி நடிகளில் ஒருவர் பவன் கல்யாண். தனது காரின் மேற்கூறையில் அமர்ந்து பயணித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை நடத்தி வருகிறார்.
2022இல் பீம்லா நாயக் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது ஹர ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் ஆகிய படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ளார். நடிகர் சாய் தரம் தேஜூடன் பவன் கல்யாண் நடித்த ப்ரோ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பவன் கல்யாணின் அடுத்த படமான ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. பிரபல டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, எம்ரான் ஹாஸ்மி, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இதையும் படிக்க: நடிகர் விஜய்யால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான ஹாலிவுட் நடிகர்!
நடிகர் பவன் கல்யாண் பிறந்தநாளான செப்.2ஆம் நாள் இந்த படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியானது. இதில் கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸின் குரலில் 100 நொடிகள் இருக்குமாறு வெளியானது. தெலுங்கு, தமிழ், ஹிந்தியென 3 மொழிகளிம் டீசரை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது ‘தே கால் ஹிம் ஓஜி’, ‘தீப்புயல் வருகிறது’ “ஹங்ரி சீட்டா” “பசித்த சிறுத்தை” என்ற ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் (எக்ஸ்) டிரெண்டிங்கில் உள்ளன.
இந்த க்ளிம்ஸ் விடியோ தற்போது யூடியூப்பில் 20 மில்லியன் (2 கோடி) பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.