ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அயலான் வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?

அயலான் படத்தின் வெளியீட்டுத் தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2023, 12:13 pm

DIN

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து  கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற தீபாவளி (நவ.12) அன்று அயலான் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அயலான் படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் 2024 பொங்கல் வெளியீடாக இப்படம் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.