கார் வாங்கி பரிசளித்த குக்வித் கோமாளி மோனிஷா!

கார் வாங்கி பரிசளித்த குக்வித் கோமாளி மோனிஷா!

சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பல ஓடிடி தளங்களில் வெப் தொடர்களிலும் மோனிஷா நடித்துள்ளார். 

குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை மோனிஷா தனது பெற்றோருக்கு கார் வாங்கி பரிசளித்துள்ளார்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சொந்தமாக கார் வாங்குவது பெரிய கனவு என்று குறிப்பிட்டு, தற்போது அந்த கனவு நனவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசனில் கோமாளியாக பங்கேற்றவர் மோனிஷா. இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். 

மேலும் ஆதித்யா தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவந்த மோனிஷா, குக்வித் கோமளி நிகழ்ச்சி மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார். 

விஜய் தொலைக்காட்சியிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்ற சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பல ஓடிடி தளங்களில் வெப் தொடர்களிலும் மோனிஷா நடித்துள்ளார். 

தற்போது மோனிஷா சொந்தமாக கார் வாங்கியுள்ளார். பிரார்த்தனைகளுக்கு கடவுள் பதிலளித்துள்ளதாக குறிப்பிட்டு கார் வாங்கிய விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், இது கனவு நனவான தருணம். ஏனெனில், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கார் வாங்குவது மிகப்பெரிய கனவு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே பயன்படுத்திய காரை என் அப்பா வாங்கினார். ஆனால், அந்த கார் ஆங்காங்கே நின்றுவிடும். அதனால், நாங்கள் அனைவரும் இறங்கி தள்ளி தள்ளி காரை இயக்குவோம். அதன் பிறகு ஒருகட்டத்துக்கு மேல் சுத்தமாக இயங்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட நானோ வகை காரை வாங்கினோம். ஆனால், அதைப் பார்த்து சிரித்தவர்கள்தான் ஏராளம். ஆனால், அந்த காருக்காக நன்றிக்கடன்பட்டுள்ளோம். இத்தனைகாலம் வழித்துணையாக இருந்தது. புது கார் வாங்க வேண்டும் என்பது நீண்டகால கனவு. இறுதியாக அது நடந்துள்ளது. இறைவனுக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com