தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

பிரபாஸ்.. திருமணம்.. குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்த அனுஷ்கா

நடிகர் பிரபாஸ் மற்றும் தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

அனுஷ்கா

Published On :

நடிகர் பிரபாஸ் மற்றும் தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

அருந்ததி, பாகுபலி உள்ளிட்ட படங்களில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, தற்போது மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலிஷெட்டி படத்துக்கான பிரமோஷன் பணிகளில் ரொம்ப பிஸியாக இருந்து வருகிறார்.

அண்மையில், அவ்வாறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்கா, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது செய்தியாளர் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் மனம்திறந்து பேசினார்.

நடிகர் பிரபாஸுடன் மீண்டும் ஒன்றாக இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, இந்த முடிவு என் கையில் எதுவும் இல்லை. எங்களது ஜோடியை ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியும். இதற்குக் காரணம், அந்த கதையம்சம் மற்றும் படத் தொகுப்புகள் போன்றவைதான். எங்கள் இருவருக்கும் பொருத்தமான கதைகளை உருவாக்கினால் நாங்கள் மீண்டும் இணையலாம் என்று பதிலளித்தார்.

தொடர்ந்து, 41 வயதாகும் நடிகை அனுஷ்காவிடம் திருமணம் பற்றி கேட்டதற்கு, மிக சப்தமாக சிரித்துவிட்டு, உண்மையாகவே, இதற்கு எந்த பதிலும் என்னிடம் இல்லை. அது இயல்பாகவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும். அதற்கென்று நேரம் இருக்கிறது. அப்போது அது இயல்பாக நடக்கும் என்று சிரித்தபடியே பதிலளித்தார்.

அண்மையில் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப்படம் அனுஷ்காவின் 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இருவருமே ஒருபோதும் இது பற்றி வாய்திறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.