சித்தா டீசர் வெளியீடு!
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான ‘சித்தா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் ‘டக்கர்’ வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், ‘சித்தா’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்.
இதையும் படிக்க | தடுமாறுகிறாரா ஜவான்? திரைவிமர்சனம்
சித்தப்பா உறவினை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. வழக்கமான மெலோ டிராமாவாக இல்லாமல் த்ரில்லர் படமாக இருக்குமென இயக்குநர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘சித்தா’ வருகிற செப்.28 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...