இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
2வது நாளில் உலகம் முழுவதும் ரூ. 240.47 கோடி வசூலானது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. செப்.7ஆம் தேதி வெளியான படம் இன்றோடு 5வது நாளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி படத்தில் சில்க்காக நடித்தவர் யார் தெரியுமா?

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் உள்ளது. 3ஆம் நாள் முடிவில் ரூ.384 கோடி வசூலித்தது.
இதையும் படிக்க: நான் பலியாடு ஆகிறேன்: ஏ.ஆர். ரஹ்மான்
ஞாயிற்றுக் கிழமை மட்டும் ரூ. 44.5 கோடி அளவுக்கு முன்பதிவு வாயிலாகவே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியது. சனி, ஞாயிறுகளில் கூடுதல் மக்கள் திரையரங்குகளை நோக்கி செல்வதால் 4வதுநாள் முடிவில் வசூல் ரூ.500 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் படக்குழு 4வது நாள் முடிவில் ரூ. 520.79 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. வார இறுதியில் எந்தப் படமும் இவ்வளவு வசூலிக்கவில்லையெனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் பிரதமா் மோடி சாலைப் பேரணி: உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


