நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதர்வாவுக்கு ஜோடியாகும் பிரபல வாரிசு நடிகை! 

அதர்வாவுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2023, 5:07 am

DIN

அதர்வாவுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீதேவியின் மகளும், வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளருமான போனி கபூரின் மகளான குஷி கபூர் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது இந்தி ஓடிடி படத்தில் நடித்து வருகிறார் குஷி கபூர்.  ஜான்வி கபூர் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அவரது தங்கை குஷி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

குஷி கபூர்.

குஷி கபூர்.

குஷி கபூரின் சகோதரி ஜான்வி கபூர் லவ் டுடே பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது தந்தை போனி கபூர்,  தற்போது எந்த தமிழ் படத்திலும் ஜான்வி நடிக்கவில்லை என மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், குஷி கபூருக்கு ஜோடியாக அதர்வா நடிக்கவுள்ளதாகவும், இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை. விக்னேஷ் சிவனின் அசோசியேட்டான ஆகாஷ் இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பிரமாண்ட உருவாக இருக்கும் இப்படம், அமெரிக்காவில் படமாக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இப்படம் அதர்வாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.