நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்! தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்! தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

பாபி சிம்ஹாவின் புதிய படம்: போஸ்டர் வெளியீடு!

சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

மதுரா ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் ராகேஷ் என்.எஸ். இயக்கத்தில்  நடிகர் சிம்ஹா நடிக்கும்,  “தடை உடை” படத்தின் முதல்பார்வை போஸ்வர் வெளியானது.

சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும் சரவணன், மற்றும் கட்டப்பாவை காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய ராகேஷ் என்.எஸ்.  இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.  

Story image

நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  

அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு,  சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இப்படத்தில் முதன் முறையாக முழு நீளக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.