வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகும் கேப்டன் மில்லர்!

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமை, ஓடிடி உரிமை ஆகியவை மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 6:16 am

DIN


அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு  கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

கேப்டன் மில்லரில் தனுஷின் அண்ணனாக வரும் சிவராஜ் குமார், படத்தின் முக்கிய வில்லனாக இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Story image

இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமை, ஓடிடி உரிமை ஆகியவை மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே, தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமென்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.