துணை நடிகைக்கு நாயகி வாய்ப்பு! தொகுப்பாளருக்கு நடிக்க வாய்ப்பு!!

ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர் செந்தில்குமார் - நித்யா ராம் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தொடர் அண்ணா.
துணை நடிகைக்கு நாயகி வாய்ப்பு! தொகுப்பாளருக்கு நடிக்க வாய்ப்பு!!


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடரில் நடித்துவந்த நடிகை மாற்றப்பட்டுள்ளார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மற்ற தொலைக்காட்சிகளுக்கு இணையாக பல முன்னணி தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவை டிஆர்பி பட்டியலிலும் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்று வருகின்றன. 

ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர் செந்தில்குமார் - நித்யா ராம் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தொடர் அண்ணா. பல தொடர்கள் சென்னையில் களமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி நிலப்பகுதியை அடிப்படையாக வைத்து அண்ணா தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மற்ற தொடர்களைக் காட்டிலும் அண்ணா தொடர் சற்று மாறுபட்டுள்ளது. 

அண்ணா தொடருக்கு இல்லத்தரசிகள் உள்பட பல இளையதலைமுறையைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களாக உள்ளனர். 

அண்ணா தொடரின் நான்கு தங்கைகள்
அண்ணா தொடரின் நான்கு தங்கைகள்

நான்கு தங்கைகளுடன் வாழ்ந்துவரும் அண்ணன், தனது குடும்பத்தைச் சுற்றி சந்திக்கும் சவால்களே அண்ணா தொடரின் கதை. செந்திலின் தங்கைகளாக நடிகை சுனிதா, நடிகை ப்ரீத்தா, தாரா, ஹேமா சின்ராஜ் போன்றோர் நடித்து வருகின்றனர். இதில் நான்கு தங்கைகளில் ஒருவராக நடிகை விஜே தாரா நடித்து வருகிறார். 

அவர் தற்போது புதிய தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், அண்ணா தொடரில் வீரலட்சுமி பாத்திரத்தில் தாராவுக்கு பதிலாக தொகுப்பாளர் தர்ஷு சுந்தரம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். 

தர்ஷு சுந்தரம்
தர்ஷு சுந்தரம்

அண்ணா தொடரில் நடித்துவந்த தாரா புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியின் அன்புடன் குஷி, ஜீ தமிழின் செம்பருத்தி ஆகிய தொடர்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com