சுந்தீப் கிஷன்- சிவி குமார் கூட்டணியில் மாயவன் 2! 

தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரித்து இயக்கிய மாயவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளார்கள். 
சுந்தீப் கிஷன்- சிவி குமார் கூட்டணியில் மாயவன் 2! 

தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரித்து இயக்கி 2017-ல் வெளியானது மாயவன் படம். சுந்தீப் கிஷன், லாவண்யா திரிபதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி போன்றோர் நடித்தார்கள். இசை - ஜிப்ரான். 

இந்தப் படம் தெலுங்கிலும் புராஜக்ட் கே எனும் தலைப்பில் டப் செய்யப்பட்டு வெளியானது. கலவையான விமர்சனங்களால் படம் சரியாக வசூலாகவில்லை. இருப்பினும் படம் குறித்து பலரும் பின்னர் பாராட்டி பேசினார்கள். 

யூடியூப் தளத்தில் மாயவன் படத்தின் ஹிந்திப் பதிப்பு 2020இல் வெளியானது. ஏராளமானோர் இந்தப் படத்தைப் பார்த்துள்ளது குறித்து தயாரிப்பாளர் சி.வி. குமார், “யூடியூபில் மாயவன் படத்தின் ஹிந்திப் பதிப்புக்கு இரண்டரை கோடிப் பார்வைகள் கிடைத்துள்ளன. யூடியூப் தளத்தில் பெரிய ஹிட். கரோனா ஊரடங்குக் காலத்தில் பலரும் படத்தை அமேசானில் பார்த்துவிட்டு என்னை அழைத்தார்கள், குறுஞ்செய்தி அனுப்பினார்கள், பாராட்டினார்கள்” எனக் கூறியிருந்தார். 

மாநகரம் பட வெற்றிக்குப் பிறகு சுந்தீப் கிஷனின் மைக்கேல் படம் சரியாக அமையவில்லை. இந்நிலையில் மாயவன் 2 படம் மீண்டும் அவருக்கு புகழை தருமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பூஜை போடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. 

ஏகே என்டர்டெயின்மெண்ட்ஸ்ஸின் 26ஆவது தயாரிப்பாக இந்தப் படம் உருவாக உள்ளது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com