
எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் ஹரிபிரியா இசை, கித்தார் இசைக்கு ஏற்ப பாடல் பாடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அத்தொடரில் தர்ஷினி பாத்திரத்தில் நடிக்கும் மோனிஷா கிட்டார் வாசிக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கடந்த வாரம் வெளியான டிஆர்பி பட்டியலிலும் எதிர்நீச்சல் தொடர் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
மக்கள் மனங்களை வென்ற ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து மறைவுக்குப் பிறகு பலரும் எதிர்நீச்சல் தொடரில் ஏற்படவுள்ள திருப்பங்களை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். அவர் நடித்துவரும் ஜீவானந்தம் பாத்திரம் உள்பட நந்தினி, கரிகாலன், ஆதிரை, ஜான்சி ராணி, ஜனனி, சக்தி போன்ற பாத்திரங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், நந்தினி பாத்திரத்தில் நடித்துவருபவர் ஹரிபிரியா இசை. எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் இவர்.
நந்தினியின் வெகுளித்தனங்களும், அவர் பேசும் காமெடி வசனங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை.
தற்போது அவர் தனது பெயருக்கேற்ப பாடல் ஒன்றை பாடியுள்ளார். இளையராஜா இசையில் கண்ணே கலைமானே எனத் தொடங்கும் பாடலை அவர் பாட, அத்தொடரில் நடிக்கும் மோனிஷா கித்தார் வாசிக்கிறார். இந்த விடியோவை எதிர்நீச்சல் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஹரிபிரியாவின் குரல் மிகவும் இனிமையாக இருப்பதாகவும், மோனிஷா இசை பயிற்சியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அவ்வபோது பரதநாட்டியம் நடனமாடும் விடியோக்களையும் ஹரிபிரியா இசை பகிர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.