விரைவில் அறிமுகமாகும் 3 தொடர்கள்!

தொலைக்காட்சிகளில் விரைவில் அறிமுகமாகவுள்ள தமிழ்த் தொடர்களின் பட்டியலைக் காணலாம். 
விரைவில் அறிமுகமாகும் 3 தொடர்கள்!


தொலைக்காட்சிகளில் விரைவில் அறிமுகமாகவுள்ள தமிழ்த் தொடர்களின் பட்டியலைக் காணலாம். 
 
தொலைக்காட்சிகளில் சின்னத்திரை தொடர்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பப்படுகிறது. இதனால் முன்னணி தொலைக்காட்சிகள் பலவும், புதிய தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றன. 

சிங்கப்பெண்ணே

சன் தொலைக்காட்சியில் சிங்கப்பெண்ணே தொடர் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது. சன் தொலைக்காட்சி வலைதளத்தில் இந்தத் தொடருக்கான அதிகாரப்பூர்வ முன்னோட்ட (புரோமோ) விடியோ வெளியாகியுள்ளது.

இதில் கிராமத்துப் பெண் பாத்திரத்தில் நடிகை மனீஷா மகேஷ் நடிக்கிறார். கிராமத்தில் சுட்டித்தனங்கள் செய்யும் குறும்புக்கார பெண்ணாக அவர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணான கண்ணே தொடரை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரையும் இயக்குகிறார். 

நளதயமந்தி

இதேபோன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரியங்கா நல்காரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் நளதயமந்தி தொடர் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நல்காரி.

ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நாயகியாக நடித்து வந்தார். சீதா ராமன் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த சமயத்தில், திடீரென தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சிறிய இடைவேளைக்குப் பிறகு நளதமயந்தி தொடரில் நடிக்கிறார். 

ஏழைப்பெண்ணாக வரும் பிரியங்கா, அம்மா நடத்திவந்த உணவகத்தில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவளித்து வருகிறார். மறைந்த அம்மாவின் ஆசைக்காக அவ்வாறு செய்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவளிக்க அனுமதிக்கும் கணவனை எதிர்பார்த்து அவர் காத்திருக்கிறார். அப்போது நாயகன் அறிமுகம் நடக்கிறது.

சந்தியா ராகம்

மேலும், ஜீ தமிழில் சந்தியா ராகம் என்ற தொடரும் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது. அண்ணா தொடரில் நடித்த வி.ஜே. தாரா இத்தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அக்கா, தங்கை இடையேயான பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்துடன் சந்தியா ராகம் ஒளிபரப்பாகவுள்ளது.

ஒருத்தி பட்டாம் பூச்சி, ஒருத்தி தொட்டால் சினுங்கி என பாடலிலேயே அக்கா - தங்கை பாத்திரங்களை விளக்கும் வகையில் வெளியாகியுள்ள முன்னோட்ட விடியோ பலரைக் கவர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com