ஜெயிலர் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ததாக அந்த படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
முன்னதாக, இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோரின் தோற்ற புகைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தில் வில்லனாக நடித்திருந்த சுனிலும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நெல்சன் திலீப்குமார், 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்.
மேலும், பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ஜெயிலர் படம் திரைக்கு வருவது தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
‘ஜெயிலர்’ படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், படம் எப்போது வந்தாலும் பிரமாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...