
கோப்புப்படம்
மாவீரன் வெளியீட்டுத் தேதியை வீடியோ வெளியிட்டு, படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாவீரன் திரைப்படம், ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சிறப்பு விடியோவை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
My dear brothers and sisters, see u in theatres #MaaveeranFromAugust11th
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 22, 2023
வீரமே ஜெயம் #Maaveeran #Mahaveerudu#VeerameJeyam@madonneashwin @AditiShankarofl @DirectorMysskin @ShanthiTalkies @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @iYogiBabu… pic.twitter.com/TRzMmRrXHM

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...