இந்த தமிழ் நடிகையை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா?

இந்த தமிழ் நடிகையை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா?

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக இருந்தவர். தற்போது அரசியல்வாதியாகவும் உள்ளார்.
Published on


இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக இருந்தவர். தற்போது அரசியல்வாதியாகவும் உள்ளார்.

குஷ்பு சுந்தர் என்று சரியாக சொல்லியிருந்தால்.. ஆம் மிகச் சரி. இந்தப் புகைப்படம் நடிகை குஷ்புவின் புகைப்படம்தான். நமக்குத் தெரிந்தது, குஷ்பு வருஷம் 16 படத்தில் அறிமுகமானபோதுதான். ஆனால், அவர் 1980ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படம் தி பர்னிங் டிரெயின் என்ற படத்திலேயே குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்தவர்.

1980 முதல் 85 வரை அவர் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென  ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவர்.

அவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பழைய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். முதல் புகைப்படம் மிக அழகான ஒரு கவுனில் ஹேர் கட் செய்த கருப்பு வெள்ளைப் புகைப்படமாக உள்ளது. அடுத்து, தலையில் ரிப்பன் கட்டியபடி கண்களை சுருக்கிக் கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

சிறுமியாக இருந்த போது, பிறகு படத்தில் நடிக்க வருவதற்கு முன்பான புகைப்படங்களையும் அவர் இதில் இணைத்திருக்கிறார். அவரது புகைப்படங்களுக்கு நடிகை மீனா, நடனக் கலைஞர் பிருந்தா உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com